எக்னெலிகொட கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்.. : முன்னாள் புலி உறுப்பினர் முரளியை விசாரிக்க முடிவு




ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் 4ஆவது சாட்சியாளரான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவரும் பின்னர் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கடமையாற்றியவருமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் முரளி எனும் சுமதிபால சுரேஷ்குமாரிடம் மீண்டும் சாட்சியம் பதிவு செய்வதற்கு, வழக்கு தொடுநர் தரப்பு எதிர்பார்க்கும் நிலையில், அது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஆராயப்படவுள்ளது

முரலி எனும் சுமதிபால கரேஷ் குமாருக்கு அவரது சாட்சியத்தை மாற்றுவதற்கு முதல் பிரதிவாதி உள் ளிட்டவர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பில் பிரத்தியேசு விசாரணை நடக்கிறது.

அவ்விசாரணை இன்னும் முடியாதநிலையில், அதில் முதல் பிரதிவாதி குறித்த விசாரணைகள் பெரும் பாலும் நிறைவடைந்துள்ளதாக வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொளிரிட் டர் ஜெனரால் வந்த பெரேரா முன்வைத்த விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டது.

அதன்படியே, முரளி எனும் சுமதிபால சுரேஷ் குமாரின் சாட்சியத்தை மீளப் பதிவு செய்ய அனுமதிப்பதா இல்லையா என்பதைத் நீர்மானிக்க செப்டம்பர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணைகள் நீதிபதி நாமல் பலல்லே தலை மையில் மகேன் வீரமன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னால் விசேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் மொரட்டுவை பகுதியை சேர்ந்த முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் முரளி எனும் சுமதிபால சுரேஷ்குமாரின் வீட்டை கடந்த 2015 செப்டம்பர் மாதம் முதலாம் திகதி சி.ஐ.டி.யினர் சோதனை யிட்டு சில ஆவணங்களை மீட்டதாகவும், தனது கணவர் இராணுவத்தில் சேவையாற் றியவர் எனவும், சோதனை நடக்கும் போது கணவரும் வீட்டில் இருந்ததாகவும் குறித்த சாட்சியாளர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவின் கேள்விகளுக்கு பதில ளித்து சாட்சியமளித்தார்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்ட 3 ஆவணங்கள் இதன்போது சான்றுப் பொருட் களாக மன்றில் பதிவு செய்யப்பட்டன.

ஒபரேஷன் டபிள் எட்ஜ் என்ற ஆவணம் | உள்ளிட்ட மூன்று ஆவணங்கள் இவ்வாறு மன்றில் சான்றாவணமாக பதிவு செய்யப் பட்ட நிலையில், தனது கணவர் இராணுவத்தில் இருக்கும் போது இராணுவம் சார் ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துவருவது வழமை என சாட்சியாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், சாட்சி விசாரணைகளுக்காக குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள் ளதுடன் அன்றைய தினம் 48,65,72 ஆம் இலக்க சாட்சியாளர்களின் சாட்சியம் பதிவு செய்யப்படவுள்ளது.

அதற்காக அவர்களுக்கு அன்றைய தினம் மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்பப்பட்டது
 
2010ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய காலப்பகுதிக்குள். கிரிதலே, கொஸ்வத்த மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில், தம்முடன் தொடர்பில்லாத நபர்களுடன் இணைந்து பிரகீத் எக்னெலிகொடவை இரகசியமாக சிறைவைக்கும் நோக்கத்தில் கடத்திச் சென்றமை, அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை தொடர்பில், பிரதிவாதி களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.