ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நினைவேந்தல் தொடர்பில் பரவும் போலி அறிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) கையெப்பத்துடன் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அறிக்கையானது ஜனாதிபதியின் கையொப்பத்துடன் சமூக வலைத்தளங்களில் அதிகம் பதவப்பட்டு வருகிறது.

இந்த ஊடக அறிக்கையில் போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.

இதேவேளை, போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.