யாழில் நூற்றாண்டு பழமையான மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்திற்கு தடை!


யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக நூற்றாண்டு பழமையான மலை வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளதால் வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கச்சேரி – நல்லூர் வீதிக்கு அருகில் காணப்பட்ட குறித்த மரமானது நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்தது, அதானல் அருகில் இருந்த வீட்டின் மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மரத்தினை வீதியின் குறுக்கே காணப்படும் மரத்தினை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.