இலங்கையை பிரபலப்படுத்திய பிரபல குத்துச்சண்டை வீரர் மீது கொடூர தாக்குதல்



இலங்கையை பிரபலப்படுத்திய திறமையான குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்சான் என்ற வீரர் கண்டியில் இனம்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கி, வெட்டப்பட்டு, புச்ச ஹந்தான விண்ட் மைதானத்திற்கு அருகில் உள்ள வெறிச்சோடிய பிரதேசத்தில் படுகாயயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கண்டி, வைத்தியசாலை வீதியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, ​​மகனை வைத்தியசாலை சந்திக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த குண்டர்கள் குழுவொன்று இரும்புக்கரம் கொண்டு தாக்கியதாகவும் தினுஷ லக்சனின் தாயார் திருமதி பெரேரா தெரிவித்தார்.

மகனின் கையடக்கத் தொலைபேசி இயங்காத காரணத்தினால், அவரது உறவினர்களும் நண்பர்களும், அவரை தேடிச்சென்றவேளை மகன் தாக்கப்பட்டு, வெட்டப்பட்டு, ஹந்தான விண்ட் ஸ்டேடியம் பகுதியில் உள்ள பாழ் நிலத்தில் விடப்பட்டதை  கண்டுள்ளனர்.

லக்சனின் உறவினரான சுரேஷ் லக்மின, அவரை உடனடியாக கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், சில பாதுகாப்புப் பிரிவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.