யாழில் திடீர் மூச்சுத்திணறலால் 54 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் நேற்றையதினம் (20) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வந்த போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கிராம்புவில் சாவகச்சேரியை சேர்ந்த சுஜீபன் றேஸ்மி என்ற பெண்குழந்தையை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.