அவுஸ்திரேலியாவிலிருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் : யாழ்ப்பாணம், வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என தகவல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய புலனாய்வு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த நபர்கள் நீண்ட காலமாக நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.