பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக, முன்னாள் pனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் 9 பேருந்துகள், மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
375 இலட்சம் ரூபாய் செலவில், அவை பழுதுபார்க்கப்பட்டு, மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மீதமுள்ள பேருந்துகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை காலமும் இந்த பேருந்துகள், கட்டுப்பெத்தையில் அமைந்துள்ள சுப்பர் சொகுசு பேருந்து சாலையில் பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தநிலையில் எஞ்சிய பேருந்துகளுக்கான தேவையான உதிரிப் பாகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள், அவை சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர சேவைகளுக்கு அதிக பேருந்துகள் தேவை என்ற அடிப்படையில் அந்த பேருந்துகளைப் பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.