அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 நவம்பர் 24ஆம் திகதி வரை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவிற்காக காத்திருக்கும், இதுவரை தடுத்துவைக்கப்படாத இலங்கையர்களின் எண்ணிக்கை 3065 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
சட்ட மற்றும்  ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும் உடனடியாக நாடு கடத்த முடியாது, புகலிடக்கோரிக்கைகள் காரணமாகவும் நாடு கடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து நாடுகளும் குடியுரிமை குறித்து ஆராயவேண்டும், பயண ஆவணங்களை வழங்கவேண்டும்,
நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு கடத்தியவர்களுடன் வரும் விமானங்களை ஏற்க மறுக்கும் நாடுகளையும், அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு பட்டியலிட்டுள்ளது.
 எனினும் இந்த பட்டியலில்  இலங்கை இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            