யாழில் 11 வாள்களுடன் 22 வயது இளைஞர் கைது..!

யாழ்.வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் 11 வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 22 வயதான, கோயிலில் சடங்கு செய்யும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.