கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்; கூகுள் நிறுவனம் வெளியீடு!


கூகுளில் இந்த ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் இவ்வாண்டு கூகிளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டுகளுடன் தொடர்புடைய சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது.

இது இணையதில் உள்ள வார்த்தைகளோடு தொடர்புடைய விளையாட்டாகும்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியா - இங்கிலாந்து (India vs England) எனும் சொல் உள்ளது.

உலக அளவில் அதிக மக்கள் இந்த சொல்லை தேடி உள்ளனர்.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக உக்ரைன் என்பது உள்ளது.

உக்ரைன் போரின் விளைவாக இந்த வார்த்தை அதிகம் தேடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.