இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது.
மேலும் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்து வரும் 21 மாத கால போரில், இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.
எனினும், அவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்களில் பாதி பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.