படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு : பலரை காணவில்லை : இத்தாலியில் சம்பவம்


இத்தாலியில், ஆபிரிக்க அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்ததுடன், 17 பெயரைக் காணவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபத்தில், ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 60 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், காணாமல் போனோரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 
இத்தாலியின், லேம்பெடுசா தீவு (டுயஅpநனரளய) அருகே, ஆபிரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஐரோப்பிய நாடான இத்தாலியையும், வட ஆபிரிக்க நாடுகளையும் மத்திய தரைக்கடல் பகுதி இணைக்கிறது.
 
இந்த கடல் பகுதி வழியாக ஆபத்தான படகு பயணங்கள் மூலம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆபிரிக்க மக்கள் அகதிகளாக இத்தாலிக்கு பயணிக்கின்றனர்.
 
இந்த ஆண்டில் நேற்று வரை 38,263 பேர் இத்தாலி கரையை அடைந்துள்ளனர் எனவும், இதுவரை 675 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.