குருணாகல் (Kurunegala) - குளியாப்பிட்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குளியாப்பிட்டி - நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் குறித்த வானின் சாரதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அத்துடன் இந்த விபத்தில் 13 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.