ChatGpt உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவன்.. அமெரிக்காவில் அதிர்ச்சி!


அமெரிக்காவில் 16 வயது சிறுவன் செட்ஜிபிடி உதவியுடன் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆடம் ரெய்ன் என்ற 16 வயதுடைய சிறுவன் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கையடக்கத் தொலைபேசியில் செட்ஜிபிடி உரையாடல்களை பெற்றோர் பார்வையிட்டுள்ளனர்.

இதில், தற்கொலைக்கான வழிமுறைகள் பற்றி சிறுவன் ஒரே நாளில் 650 முறை செட்ஜிபிடியிடம் உரையாடியதும், ஒரு கட்டத்தில் கயிற்றின் புகைப்படத்தை செட்ஜிபிடியில் பதிவேற்றி அதன்மூலம் தற்கொலை செய்து கொள்ள முடியுமா என்று கேட்டதற்கு ஆம் என்று செட்ஜிபிடி பதிலளித்திருப்பதும் தெரியவந்தது.
 
இதையடுத்து தங்கள் மகன் தற்கொலைக்கு உதவியதாக, செட்ஜிபிடியின் ஓபன்ஏஐ நிறுவனம் மீது சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் ஆடம் ரெய்ன் உயிரிழந்தது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ள ஓபன்ஏஐ நிறுவனம், செட்ஜிபிடி-யில் சில குறைபாடுகள் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது.
தற்கொலை முடிவு போன்ற முக்கிய பிரச்னைகள் பற்றி பேசும்போது செட்ஜிபிடி-ஐ மிகவும் பொறுப்புடன் பதிலிளிக்கும் விதமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.