120 ரூபா பார்லே-ஜி பிஸ்கட் விலை 8000 ரூபா : காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ



காசாவில் இருந்து அண்மையில் வெளியான ஒரு வைரல் பதிவில், இலங்கை மதிப்பில் 120 ரூபாவுக்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ஒன்று 8000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் போரின் கொடூர முகத்தைக் காட்டும் மற்றொருச் சான்று என இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இலங்கை, இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் இந்த பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் குறிப்பிட்ட விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசாவை சேர்ந்த நபர் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதில்
 "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. தரவு அறிக்கையின் பிரகாரம், காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

 மார்ச் மாதத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசாவுக்குள் நுழையும் உதவிகளுக்கு இஸ்ரேல் 11 வார தடையை விதித்தது.

இந்த தடை ஓரளவு நீக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் உள்ளன. இதன்படி காசாவுக்குள் வரும் அனைத்து உதவிகளையும் சரிபார்க்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஹமாஸ் பொருட்களைத் திருப்பிவிட்டதாக குற்றம்சுமத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்து வருகிறது.


மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ஐ.நா தலைமையிலான ஊட்டச்சத்து குழு நடத்திய பகுப்பாய்வில், காசாவில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட  ஐந்து வயதுக்குட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 5.8 வீதமானோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டியதாகக் கண்டறிந்துள்ளது.