https://aaib.gov.in/What's%20New%20Assets/Preliminary%20Report%20VT-ANB.pdf
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் 2 இயந்திரங்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் வெளியாகியுள்ளன.
ஒரு விமானி, தனது சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்த நிலையில், ரெட் RAT எனப்படும் Ram Air Turbine என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது.
அப்போது எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கி ஒரு இயந்திரம் மட்டுமே செயற்பட்டுள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் விமானத்தில் நிரப்பப்பட்டிருந்த எரிபொருள் மாதிரிகளானது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் பரிசோதிக்கப்பட்டதாகவும், அதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் 2 இயந்திரங்களும் 1 விநாடி வித்தியாசத்தில் அடுத்தடுத்து செயழிந்தாகவும், அவற்றை மீண்டும் செயல்படுத்த முயன்றபோது ஒன்று மாத்திரமே மீண்டும் செயல்படுவதற்கான அறிகுறிகளை காட்டியதாகவும், மற்றொன்று செயல்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இயந்திரம் செயழிந்து விமானம் கீழே விழுந்திருக்கிறது. விமானிகள் எவ்வளவோ முயன்றும் விமானத்தை மீண்டும் இயக்க முடியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், விமானமானது இந்திய நேரப்படி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட நிலையில், 1:39 மணிக்கெல்லாம் விமானிகளில் ஒருவர் ‘மே டே மே டே’ என்று அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். உடனே விமான போக்குவரத்து கட்டுபாட்டாளரும் அழைப்பு குறித்து விசாரித்திருக்கிறார். ஆனால் அந்த பக்கத்திலிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் விமான நிலையத்திற்கு வெளியே விமானம் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதை நேரில் பார்த்து அவர் உடனே அவசரகால பதிலை செயல்படுத்தி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு விமான நிலையத்தில் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், அவற்றில் எந்த பாகங்களை ஆராய வேண்டுமோ அவை தனியாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபோக, ஏர்போர்ன் ஃப்ளைட் ரெக்கார்டரில் (EAFR) இருந்து பெறப்பட்ட தரவுகள், விபத்தில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள், என்ஜின் ஆபரேட்டர்கள் உள்ளிட்டவற்றை வைத்தும் கூடுதல் விபரங்களை சேகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விமான விபத்து புலனாய்வு பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.