'எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்' - ட்ரம்பின் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்
அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளைச் சமாளிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதென, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி எதை நோக்கி நகர்கிறார் என்பது எங்களுக்குப் புரிகிறது.
புதிய தடைகளைச் சமாளிப்போம் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.
இது போன்ற மிரட்டல்களை விடுக்க ட்ரம்ப்பை எது தூண்டுகிறது என்பது எமக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது என, செர்ஜி லாவ்ரோவ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முதலில் எச்சரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் வைப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என, ரஷ்ய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய அறிக்கை மிகவும் தீவிரமானது எனவும், ஜனாதிபதி புடினை, ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்துள்ளார் என்றும், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளமையும் குறிப்பி