'எமது மீனவர்கள் தீவிரவாதிகள் அல்ல.." : இஜாஸ் மீதான துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனம்



திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இஜாஸ் என்ற கடற்றொழிலாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், நமது கடற்றொழிலாளர் தீவிரவாதிகள் போல் நடத்தப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

 கடற்தொழில் திணைக்களத்தில் முறையாக சுருக்கு வலைக்கு அனுமதி பத்திரம் பெற்று கடலுக்கு சென்ற கடற்றொழிலாளரகள் மீதே கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுருக்கு வலை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 7 மைல் நிபந்தனை திருகோணமலை போன்ற குடா பகுதிகளுக்கு பொருத்தமற்ற ஒன்று என நான் பல வருடங்களாக பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சுட்டிக்காட்டி உள்ளேன். இதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு மூல காரணம்” என்றார்.

திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்பாவி சமூகத்தினர் மீது, கடற்படை பாதுகாப்பு தரப்பினர் அத்துமீறு நடப்பதை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் கூறியுள்ளார்.

--