பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் அவர் பதவி விலக தயாரா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர்,
போர் முடிந்தால் தேர்தலுக்கு செல்லமாட்டேன். காரணம், என் நோக்கம் தேர்தல் அல்ல போரை முடிப்பதே எனது நோக்கமாகும்.
நீண்ட கால அமைதியை அடைவதற்குத் தேவையான முக்கியமான முடிவுகளை எடுக்க மக்கள், புதிய ஆணையைக் கொண்ட ஒரு தலைவரை விரும்பக்கூடும் என்பதை தான் புரிந்துகொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய நாட்டு தலைவர்களுக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைனின் உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரஷ்யாவின் அதிகார மையங்கள் மீது உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்த தயங்காது
மேலும் ரஷ்ய தலைவர்கள் போரை உடனடியாக நிறுத்துங்கள் அல்லது பதுங்கு குழிகள் எங்கே உள்ளது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் ரஷ்ய அதிகாரிகளுக்கு அவை விரைவில் தேவைப்படும்
அத்துடன், ரஷ்யாவின் பொதுமக்கள் மீது ஒருபோதும் உக்ரைனிய படைகள் தாக்குதல் நடத்தாது என்றும் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.