'சில கர்ப்பிணி தாய்மாரின் செயல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள்.." : கரையோர பகுதிகளில் அடையாளம்




இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தெஹிவளை-கல்கிஸ்ஸை மாநகரசபையின் உறுப்பினரான சமல் சஞ்சீவ கூறியுள்ளார்.

குறிப்பாக தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, மொரட்டுவ மற்றும் எகொட உயன உள்ளிட்ட இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே இவ்வாறு மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.

அதேநேரம் குறித்த பெண்கள் கரையோரப்பகுதியில் மது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

இது, பாரிய பொது சுகாதார பிரச்சினை. அதை சுகாதாரத் துறையால் மட்டும் கையாள முடியாது என்றும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண, பொதுப் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் பிற அரசத் துறைகளின் ஆதரவு தேவை என்றும் கூறியுள்ளார்.

இந்த கர்ப்பிணி பெண்களில் பெரும்பாலானோர் சுகாதார அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்வதை அல்லது பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதை தவிர்ப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.