'கெஹல்பத்தரவுடன் நாமல் தொடர்பா...? அமைச்சர் அதிரடி தகவல்



கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்களுடன் தொடர்பு இருந்திருந்தால், நாமல் ராஜபக்சவின் மனசாட்சி அதை நன்கு அறிந்திருக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

 "எதிர்காலத்தில் அந்த பாதாள உலக நபர்களுடன் சேர அரசாங்கம் எங்களை அனுமதிக்கலாம்" என்ற நாமல் ராஜபக்சவின் கூற்று தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்,
இலங்கை பொலிஸ் சாதாரண வதந்திகளின் அடிப்படையில் செயல்படாது
விசாரணைகள் மூலம் தகவல் வெளிப்படும் முன் அவர் அத்தகைய அறிக்கையை வெளியிடுவது கேள்விக்குறியாக உள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதேநேரம் இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ ஏன் கலவரமடைகின்றார் என்பது எமக்கு தெரியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 சிலரது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நாமல் எதற்காக இந்தளவுக்கு களவரமடைந்தார் என்பது எமக்கு தெரியும். குற்றங்களுடன் தொடர்பற்ற எவரும் வீணாகக் கலவரமடையத் தேவையில்லை. மாறாக வேறு தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை பொலிஸாருக்கு வழங்குவது சிறந்ததாகும். இங்கு எந்தவொரு பிரசாரமும் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் ஊழல்வாதிகளையும்,பாதாள குழுக்களையும் கைது செய்யும் போது நாங்கள் ஒன்றும் கலக்கமடையவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.