அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்க கொலையைத் திட்டமிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினையே இந்த கொலை காரணம் எனவும் இதற்கு பாதாள குழு உறுப்பினர் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பண்டிகை நிகழ்வின் ஒன்றின் போது இந்த பிரச்சினை ஆரம்பித்தாக முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்க தெரிவித்துள்ளார்.
டேன் பிரியசாத்தின் சகோதரனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் தந்தையும் மகனும் அந்த நிகழ்வில் டேன் பிரியசாத்தை சந்தித்து மிரட்டியுள்ளனர்.
பின்னர், 20 ஆம் திகதி மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக டேன் பிரியசாத் தன்தை மிரட்டிய நபர்களுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கஞ்சிபான இம்ரானின் அறிவுறுத்தலுக்கு அமைய, டேன் பிரியசாத்துக்கு எதிராக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு வரும் போது கொலை செய்வதே திட்டமாக இருந்துள்ளது.
முச்சக்கர வண்டி தாக்குதல் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின்படி, டான் பிரியசாத்துக்கு 20 ஆம் ஆஜராகுமாறு பொலிஸ் அழைப்பாணை அனுப்பியிருந்தது, ஆனால் அவர் அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே 22 ஆம் திகதி திட்டமிட்டு கொலை நடத்தப்பட்டது.
தற்போது துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலன்னாவை தனுஷ்கவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, இந்தக் கொலையைத் திட்டமிட பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க, ஆலோசனை கேட்டுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபான இம்ரானும் ஈடுபட்டதாக துலான் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
டான் பிரியசாத்தை கொல்லும் திட்டம் டானின் வீட்டில் செயல்படுத்தப்படவிருந்ததாகவும் ஆனால் அதை விரைவாகச் செய்ய வேண்டும் என்ற உத்தரவு காரணமாக அன்று அவர் வீட்டில் இல்லாததால், தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று, அவர் அங்கு செல்வதை அறிந்து டான் பிரியசாத்தைக் கொன்றதாகவும் பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர், குறிப்பாக டேன் பிரியசாத்தின் மனைவியின் சகோதரியும் அவர்களில் ஒருவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
டேன் பிரியசாத்தின் பயண விவரங்களை துலான் மதுஷங்கவுக்கு இவர்கள் வழங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.