'மாணவியை மனநோயாளி என்று கூறாதீர்கள்.." : பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

 
கொழும்பு கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இது தொடர்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அரசியல் அழுத்தம் இல்லாத விசாரணை நடத்தப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ், உயிரிழந்த மாணவியின் பெற்றோரை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய அழைத்த போது அவர்கள் முன்வரவில்லை என தெரிவித்தார்.

மேலும், குறித்த மாணவி மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றதாகவும் அமைச்சர் சரோஜினி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, உரையாற்றிய மனோ கணேசன், குழந்தையை இழந்த பெற்றோர் தங்களை வந்து சந்திக்கவில்லை என அமைச்சர் கூறுவது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார்.

இதேநேரம் மாணவியை மன நோயாளி என சித்தரிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் மனோ கணேசன் கடுமையாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தான் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்த விடயங்களை மாத்திரமே கூறியதாக குறிப்பிட்டார்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,
 
இது தொடர்பில் தான் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் கலந்துரையாடியதாகவும் உரிய விசாரணைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.