காசாவுக்குள் களமிறங்கிய 'பிசாசுப் படை" : இரத்த ஆறு ஓடும் என ஊடகங்கள் எச்சரிக்கை

ஹமாஸின் தாக்குதலால் சீற்றமடைந்த இஸ்ரேல், காசா மீது பயங்கரமான விமான தாக்குதலை நடத்திவருகிறது.

இதனால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்தும் அவதிப்பட்டும் வருகின்றனர்.

 இந்த நிலையில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

 ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வகையில் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.

 இந்த தாக்குதல்களுக்காக உலகிலேயே மிகவும் ஆபத்தான படைப்பிரிவாக கருதப்படும் இஸ்ரேலின் 'பிசாசுப் படை' காசாவில் தரையிறங்கி இருக்கிறது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 அவர்களுடன் சேர்த்து புதிதாக 6 பயங்கர படைப்பிரிவுகளை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஹமாஸ் அமைப்பினரை அழிக்க இஸ்ரேல் அனுப்பும் கடைசி அஸ்திரம் இதுவென அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

 இந்நிலையில்தான்,  மிக ஆபத்தான 6 படைப்பிரிவுகளை காஸாவுக்கு இஸ்ரேல் இராணுவம் அனுப்பியுள்ளது.

 அதில் முக்கியமானதாக ரெஃபயிம் படை காணப்படுகின்றது. ரெஃபயிம் என்றால் ஹீப்ரு மொழியில் பிசாசு என்று அர்த்தப்படுகின்றது.

 2019-இல் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பிரிவில் தரைப்படை, விமானப்படை, கடற்படை, ஆயுதப்படை, தற்காப்புக் கலை, சைபர் தாக்குதல் படை ஆகிய துறைகளில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.


 ஒரே நேரத்தில் பல பரிமாண தாக்குதல்களை இந்த பிசாசுப்படை நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றுது.  

 

இந்த 6 படைப்பிரிவுகள் சென்றிருப்பதால் காசாவில் இரத்த ஆறு ஓடும் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.