நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மொட்டு கட்சியினர் அணி திரண்ட நிலையில் தங்கள் குடும்ப உறுப்பினரை மறந்துள்ளமை குடுபமத்துக்குள் பிளவு நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அண்ணன் மகனான முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை நலன் விசாரிக்க ஒருவர் கூட சிறைச்சாலைக்கு செல்லவில்லை எனவும் இதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சஷீந்திர ராஜபக்ச நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜபக்ச குடும்பமும் பொதுஜன பெரமுன கட்சியும் ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றும் பணியில் இணைந்து மும்முரமாக செயற்பட்டனர்.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
எனினும் சமல் ராஜபக்சவும் ராஜபக்ஷவை ராஜபக்ஷவின் குடும்பத்தினர் மறந்து விட்டதாக அரசியல் தகவல் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இராஜங்க அமைச்சு பதவி வகித்த சஷீந்திர ராஜபக்சவிடம் பல பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதன்போது பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்ததாக போலியாக தெரிவித்து, அதற்காக 88 இலட்சத்து 50,000 ரூபா அரச நிதியை நட்டஈடாக பெற்றுக்கொண்டதாக சஷீந்திர ராஜபக்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.