''முழு பூமியையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம்..'' ஹமாஸ் தளபதியின் எச்சரிக்கை வீடியோ

இஸ்ரேல், முதல் இலக்கு மட்டுமே, மொத்த உலகத்தையும் கைப்பற்றுவோம் என ஹமாஸ் தளபதி ஒருவர் எச்சரிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

 ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய விடயம் உலகையே பரபரப்படையச் செய்துள்ள நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து முழு உலகுக்கும் சில்லிடவைக்கும் எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

 ஹமாஸ் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான மஹ்மூத் அல்-ஜஹார் Mahmoud al-Zahar என்பவர், இஸ்ரேல் எங்கள் முதல் இலக்கு மட்டுமே. முழு பூமியையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என எச்சரிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பூமியின் மொத்த 510 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பும் ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவரப்படும். அப்போது பூமியில் அநீதியோ, அடக்குமுறையோ, பாலஸ்தீனியர்களைக் கொல்லுதலோ, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் பிற நாடுகளில் உள்ள அரேபியர்களுக்கெதிரான குற்றச்செயல்களோ இருக்காது என்று கூறியுள்ளார் மஹ்மூத் அல்-ஜஹார் Mahmoud al-Zahar.

 இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தும் நேரத்தில் இந்த வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக  மாறுகின்றன  என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது.

காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மி;ன்சாரவிநியோகத்தை  இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.

வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்தியகிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின்  பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கி;ன்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை  இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும்  ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.