மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. கே. டி. விஜயரத்ன முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
மனைவி சொன்னதை கேட்காமையினால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் மனைவியின் அனுமதியின்றி எந்தவொரு விடயத்தையும் செய்ய மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.