இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத அமெரிக்க தீர்வை வரியானது விரைவில் 15 சதவீதமளவில் குறைவ டையும் என்பதை ஊகிக்க முடிகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார நிபுணர் சுவாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்
வீரகேசரியுடன் நேற்று நடத்திய விசேட கலந்துரையாடல் ஒன்றின் போதே இதனைத் தெரிவித்த அவர்,
இந்த விடயத்தில் எவ்விதமான தொழில்நுட்ப ரீதியான காரமைங் களும் இல்லை. ஆனால், உபாய ரீதியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இலங்கைக்கான தீர்வை வரியைக் குறைப்பார்.
அதனை நான் உறுதியாக கூறுகின்றேன். எப்போது என்றெல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம். ஆனால், இலங்கைக்கான வரி குறைவடையும்"
இலங்கைக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பது முக்கியம் அல்ல. மாறாக இலங்கையுடன் ஆடை உற்பத்தித் துறையில் போட்டி போடுகின்ற ஏனைய நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதிலேயே இந்த விடயம் தங்கியிருக்கிறது" என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.