உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இராணுவத்தினரால் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கைய ளிக்கப்பட்டுள்ளன.
நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள இரா ணுவத் தலைமையகத்தில் குறித்த ஆபரணங்கள் உத்தியோகபூர்வமாக பதில் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைக் கப்பட்டன.
இவ்வாறு இராணுவத்தினரிடமிருந்து பொலிஸ்மா அதிபரால் பொறுப்பேற்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி என்ப வற்றின் பெறுமதி நீதிமன்ற உத்தரவுக்கமைய தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையினால் மதிப்பிடப்படவுள்ளது.
இவ்வாறு ஆபரணங்களின் பெறுமதி மதிப்பிடப்பட்ட பின்னர் அவை மத்திய வங்கியிடம் ஒப்ப டைக்கப்படவுள்ளன.
அத்தோடு இவற்றில் தமது ஆபரணங்கள் இருந்தால் பொது மக்கள் அவற்றை உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவை அவர்களிடம் கையளிக்கப்படும் என்று இராணுவத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூ ரிய இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலாளரினால் ஏப்ரல் 29ஆம் திகதி பாதுகாப்பு செயலாளருக்கு இது தொடர்பில் அறிவித்தலொன்று வழங் கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரிடம் தங்க ஆபரணத் தொகை காணப்படுவதாக ஜனாதிபதிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளரினால் இது குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் எனக்கு பணிப்புரை வழங்கப்பட்டது
அதற்கமைய உரிய சட்ட நடவடிக்கைக ளுக்காக இது குறித்து பொலிஸினால் குற் றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.
அத்தோடு இது தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் தலைமையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட கலந்துரையாட லொன்றும் இடம்பெற்றது.
சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்துக்கு அறிவித்து, அதற்கமைய விசாரணைகள் முன் னெடுக்கப்படவுள்ளன.
அத்தோடு அவற்றின் எடை, தரம் மற்றும் பெறுமதி என்பனவும் மதிப்பிடப்படவுள்ளன என்றார்.
குறித்த தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களின் எடை மற்றும் பெறுமதி தம்மால் மதிப்பிடப்படவில்லை என்றும், தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சபையினால் சட்ட ரீதியாக இவை மதிப்பிடப்படும் என்றும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
எனவே தம்மால் தற்போது அவற்றின் பெறுமதி மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிட முடியாது என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்தது.