சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த மூன்று பேரை நோக்கி டீ-56 ரக துப்பாக்கியால் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின்படி, இந்த குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரத்தொலுகம, கட்டுவன வீதி, ஹோமாகம பகுதியைச் சேந்த மொஹமட் அஸ்மன் ஷெரீப்டீன் என்ற சந்தேக நபரே தலைமறைவாகியுள்ளார்.
சந்தேகநபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள் பொலிஸார், இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 8591637 அல்லது 0112 253 522
ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.