செம்மணி மனித புதைகுழி தொடர்பாக விமல் வீரவன்ஸவின் கருத்து, குறித்த விவகாரம் வேறொரு திசைக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதுடன் தடயங்களும் அழிக்கப்படப் போகின்றது என்பதற்கான வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக தென்னிலங்கையில் இருந்து வரும் கருத்துக்கள் தொடர்பாக பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர்,
நீண்டகால இடைவெளிக்குபிறகு 1995ம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்டபகுதியில் யாழ்ப்பாணத்தில் கட்டாயப்படுத்தி இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட மக்களே கொலை செய்யப்பட்டவர்கள் என்பது உறுதியாக தெரிகிறது
பெண்கள், கைகுழந்தைகள், சிறுவர்களின் எலும்புக் கூடுகள், சிறுவர் விளையாடுகின்ற பொம்மைகள், பாடசõலை புத்தகப்பை என்பன இதனை அடையாளப்படுத்துகின்றன.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உச்சகட்ட இனவாதமாக அங்கே இராணுவத்தின் இலக்கத் தகடும் இருக்கக் கூடும் என்று வெளிப்படுத்தி இருக்கிறார்.
இங்குள்ள நிலைமையை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளும் போது அந்த இடத்தில் பொலிஸாருடைய பாதுகாப்பு சரியான முறையில் வழங்கப்படாத நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவோடு இடம்பெறும் அகழ்வாய்வுப் பணியில் இராணுவத்தின் தகடு வரும் எனச் சொல்கிறார் என்றால், புதைகுழி விடயத்தை வேறொரு திசையில் கொண்டுசெல்ல அரசு முனைகிறதா என்ற சந்தேகம் வருகிறது.
அடிப்படையில் மனநோயாளியான விமல் வீரவன்ஸ, தமிழர்கள் மீது கொண்டு வரப்படுகின்ற ஒவ்வொரு கொலை முயற்சிகளையும் தமிழர் பிரதேசங்களில் கண்டெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகள், கொலை சம்பந்தமான விடயங்களையும் தமிழினத்தின் அழிப்புசம்பந்தமான விடயங்களையும் மூடி மறைப்பதற்கு வித்தியாசமானவிதண்டாவாதமான கருத்துக்களை முன்வைக்கின்ற இலங்கையினுடைய கோரமுகம் கொண்ட இனவாதி என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் அவருடைய கருத்துக்களை மையமாக வைத்து இலங்கை அரசு இந்த விடயத்தைவேறு திசைக்கு திருப்ப போகிறதா என்ற சந்தேகம் இருக்கின்றது.
விமல் வீரவன்ஸ போன்றவர்களின் கருத்து, குறித்தவிவகாரம் வேறொருதி ø ச க் கு ö க õ ண் டுசெல்லப்படப் போகின்றது, தடயம் அழிக்கப்படப் போகின்றது என்பதற்கான வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இலங்கையில் உள்ள இராணுவத்தினர் புத்தகப் பைகளை யும் விளையாட்டு பொம்மைகளையும் கொண்டு திரிந்தவர்களா என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியுள்ளது.
இராணுவத்தினுடைய உடல் தான், எலும்புக் கூடுகள் தான் என திசைதிருப்ப நினைப்பதும் சிங்களமற்றும் ஆங்கில ஊடகங்கள் கூட இதனை வேறு திசைக்கு கொண்டு செல்ல முனைகிறார்களே தவிர உண்மையை கண்டறிந்து வெளியில் கொண்டு வரும் எண்ணம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.