கொழும்பிலிருந்து யாழ். செல்லும் இரவுநேர அதிசொகுசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்த நபர் ஒருவருக்கு இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகளின் தொல்லையால் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Video Link - https://web.facebook.com/share/v/14KDC8VQYAR/
இது தொடர்பில் குறித்த பயணி காணொளி ஒன்றினை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பயணியின் காணொளி பதிவிற்கமைய, பேருந்தின் இருக்கைகளில் மூட்டை பூச்சிகள் இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து, அந்த நபர் நடத்துனரை அழைத்து இது தொடர்பில் தெரியப்படுத்தியமைக்கு நடத்துனர், அசமந்த போக்காக பதிலளித்துள்ளார்.
அதாவது, "இது எங்களுடைய பேருந்து இல்லை. எமது பேருந்து பழுதாகி விட்டது.
இன்று வேறு பேருந்தினை மாற்றி கொண்டுவந்துள்ளோம்" என அலட்சியமாய் கூறிவிட்டு சென்றுவிட்டதாக பயணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிசொகுசு பேருந்து என்ற பெயரில் பராமரிப்பு அற்ற நிலையிலும் பாதுகாப்பு அற்ற நிலையிலும் உள்ள பேருந்துகளை மக்களின் அன்றாட பாவனைக்கு கொடுப்பது ஏற்கத்தக்கது என பலர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.