அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் இதுகுறித்து உரையாற்றிய அவர்,
கோட்டாபய ஆட்சிக் காலத்திலும் அரசாங்கம் ஆபத்தான நிலையை நோக்கி செல்கையில் தாம் இவ்வாறு சுட்டிக்காட்டினோம்.
மத்திய அதிவேக பாதையின் எஞ்சியுள்ள வேலைகளை முடிப்பதற்காக சீனாவின் எக்சீம் வங்கியில் 500 மில்லியன் டொலர்களும் திரைசேறியில் 493 மில்லியன் டொலர்களுடன் 993 மில்லியன் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
குறித்த கடன், கடன் மறுசீரமைப்பு குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ளதா?
அத்தோடு இந்தக் கடனை எப்படி செலுத்த போகின்றனர் என்பது தொடர்பில் குறிப்பிடவில்லை.
கட்டாயம் அதிவேக பாதைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆனால் கடனை செலுத்தும் வழிகளையும் தேடிக் கொள்வது சிறந்ததாகும். இந்த வருடத்தில் எமக்கு ஐஎம்எப் 335 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அத்தோடு இதர நிறுவனங்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் 300-305 டொலர் மில்லியன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது. அதுவும் எமக்கு பாதிப்பாகும்.
மேலும் இந்த வருடத்தில் முடிவடைந்த ஆறு மாதங்களில் வெளிநாட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் - நவம்பர் மாதத்தில் காணப்பட்டதை விட குறைந்துள்ளது. மேலும் இலங்கையின் தேசிய நிதி சந்தையில் டொலரின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன.
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச்சில் குறைவடைந்துள்ளது.
மேலும் ஆகக் குறைந்த வெளிநாட்டு கையிருப்பு 2025 மார்ச் மாதத்தில் இருந்து ஜுலை மாதத்தில் குறைந்துள்ளது. அரசின் நிதி நிலைமையில் இவ்வாறான சம்பவங்கள் சிவப்பு எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.
இவ்வாறு நாங்கள் குறிப்பிடும் தகவல்களை அரசாங்கம் குறையாகவே பார்க்கிறது. ஆனால் இலங்கை மத்திய வங்கி பின்பற்றும் நிதி கொள்கைகளால் அரசாங்கம் பாதுகாப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.