வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் - நீதி கோரி போராடும் மக்கள்

முல்லைத்தீவு  வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சடலமாக மீட்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது



கடந்த வருடம் இதே நாளில் முல்லைத்தீவு பாண்டியன் குளம் சென்று திரும்பி கொண்டிருந்த  குறித்த இளைஞன் கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்  


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின்  மரணத்திற்கு நீதி கோரி  ஒரு வருடங்கள் ஆகியும் குறித்த இளைஞனின் மரணத்திற்கு  தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை  இது தொடர்பில் பொலிஸார் அசமந்த போக்கையே காட்டி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.


 இந்நிலையில் குறித்த இளைஞனின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகிய இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
 

மல்லாவி பேருந்து நிலையத்திலிருந்து  மல்லாவி பொலிஸ் நிலையம் வரை குறித்த  போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.