யோகிபாபுவின் சொத்துமதிப்பு எவ்வளவு என்று தெரியுமா..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் யோகிபாபுவும் ஒருவர். இவர் இல்லாத திரைப்படங்களை பார்க்கவே முடியாத அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து வருகின்றார்.ஆரம்ப காலத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு பிரபலம் ஆனார். இதற்கு பிறகு மண்டலா, கூர்க்கா ,ஜாம்பி போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் காமெடி நடிகராக  அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். யோகிபாபு  சமீப காலத்தில் வெளிவந்த டாக்டர் படத்தில் இவருடைய காமெடி காட்ச்சிகளை மக்கள் மிகவும் வரவேற்றனர். 2020 தாம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது யோகிபாபு வலிமை, பிஸ்ட், அயலான், பன்னிக்குட்டி,சலூன், பொம்மைநாயகி, கடைசி விவசாயி என பல படங்களில் நடித்துக் கொண்டுருக்கிறார்.

ஆரம்பத்தில் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதே குறைவு. ஒரு படத்துக்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கிய இவர் இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றார். தற்போது ஒருநாளைக்கு 5 லட்சம் வரை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி சம்பாதித்து யோகிபாபுவின் சொத்துமதிப்பு 40 கோடி என்கிறார்கள்ஆனால் 40 கோடி என்பதுஎல்லாம் அவர்க்கு ஒரு பணமே இல்லை. அவரிடம் இன்னும் பலகோடிகள் இருக்கும் என அவரது  ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.