தனக்கு தானே மேனேஜரான யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தான் முன்னணி காமடியன் ஆன பிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்து கொள்ளும் மேனேஜராக நியமித்து இருந்தார் யோகி பாபு. ஆனால் தற்போது யோகிபாபு மேனேஜர் சசி அந்த பணியில் இருந்து            விலகி கொண்டு உள்ளார். இதன் பிறகு யோகி பாபு வெளிட்டுள்ள ஒரு செய்தியில் இனிமேல் எனக்கு மேனேஜர் என்று தனிப்பட்ட முறையில் யாரும் கிடையாது. என்னுடைய கால் ஷீட்டுக்களை நானே கவனித்து கொள்ளப்போகிறேன்.அதனால் படம் சம்பந்தமாக அனைவரும் என்னை நேரடியாக அணுகலாம் என்று கூறிஉள்ளார்.