பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு செம்மஞ்சள் வெப்ப எச்சரிக்கை!

அடுத்த நான்கு நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் (99 பாரன்ஹீட்) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு செம்மஞ்சள் தீவிர வெப்ப எச்சரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கான வானிலை அலுவலக எச்சரிக்கை வியாழன் நள்ளிரவு முதல் ஞாயிறு வரை நடைமுறையில் இருக்கும்வார இறுதியில் தீ தீவிரம் குறித்து அதன் மிக உயர்ந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பல இடங்களில் தீ பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளது.வெப்ப அலையானது உடல்நலம், போக்குவரத்து மற்றும் வேலை நிலைமைகளை பாதிக்கும் எனவும் நீர் தேவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜூலை மாதத்தில், பாதரசம் முதல்முறையாக 40செல்சியஸ் (104 பாரன்ஹீட்)ஐ எட்டியது. ஆனால், அந்த சாதனை முறியடிக்கபடாது என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சில பகுதிகளில் வெப்பம் உள்ளூர் அல்லது பிராந்திய பதிவுகளை நெருங்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.