2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண நியமனத் திட்டம் (PNP) வழியாக 302 வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர வதிவிடத்திற்கான (PR) அழைப்புகளை அனுப்பியுள்ளது.
இந்த அழைப்பு, draw number 374 என அழைக்கப்படுகிறது.
இதில் குறைந்தபட்ச விரிவான தரவரிசை அமைப்பு (Comprehensive Ranking System) (CRS) மதிப்பெண் 761-ஆக இருந்தது, இது கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியிலிருந்து 17 புள்ளிகள் குறைந்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும்
இந்த PNP திட்டம், கனடாவின் மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், கனடாவில் வாழ வேலை செய்ய மற்றும் நிரந்தரமாக குடியிருப்பதற்கான உரிமையைப் பெறுவர்
CRS மதிப்பெண் விநியோக பட்டியலில், 451-500 மதிப்பெண் கொண்டவர்கள் 69,503 பேர் உள்ளனர். மொத்தமாக 248,253 பேர் Express Entry புலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரங்கள், புதிய விண்ணப்பங்கள் சேரும் போது மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு, கனடா அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஈர்க்கும் புதிய குடியுரிமை திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
