நடிகை சமந்தா நடித்து வரும் ‘யசோதா’ என்ற புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது . ஸ்ரீதேவி மூவிஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகை சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகி வரும் யசோதா படத்தை கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மார்ச் 31 ஆம் தேதி வரை இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தயாரிப்பாளர் சிவலெங்கா பிரசாத் தெரிவித்துள்ளார்.