உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக உயர்வு!

உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும்.தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை.ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன.பிரித்தானியாவில் 207 பேர், ஸ்பெயினில் 156 பேர் மற்றும் போர்த்துகலில் 138பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.