நாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும்-ஜோ பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஆகவே உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.ஆகவே உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல், மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.