முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் இடம்பெற்ற போது சுற்றி இருந்த எவரும் தாக்குதலை தடுக்க முற்பாடாததை காணொளியில் காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில், சம்பவத்துடனான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேபோன்று அண்மையிலும் யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.
இந்த சம்பவத்தில், 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை உடனடியாக கைது செய்யவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பொலிசாரிடம் வலியுறுத்தியிருந்தார்.
இந் நிலையில் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய குறித்தநபர் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகையசூழலில் குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கிய நபரை உடனடியாகக் கைதுசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தலும்; ஈடுபட்டனர்.