இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி இரத்தாகின்றதா..? வெளியான அதிரடி தகவல்


இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 வீத அபராத வரி, எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
இந்திய பொருட்கள் மீது 25 வீத வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் 25 சதவிகித வரியை அபராதமாக விதித்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை, டெல்லியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி பிரெண்ட் லின்ச் தலைமையிலான குழுவினர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன்,
இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 வீத அபராத வரி, நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும்
மேலும், இந்திய பொருட்கள் மீதான வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறையும்  

அமெரிக்க வரி தொடர்பான பிரச்னைக்கு 8 முதல் 10 வாரங்களில் தீர்வு காணப்படும்
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை  

எனினும் இந்தியா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், தனது உள்ளுணர்வின் வெளிப்பாடு இது என்றும் ஆனந்த நாகேஸ்வரன் குறிப்பிட்டார்.


இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் இந்தியாவுக்கு நெருக்கமானவர் என்றும், பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து பிரதமர் மோடியை அடிக்கடி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டி பேசிவந்தார்.
 
இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார்.

அதில் பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருவதாகவும், ரஷ்யா - உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைப்பு வழங்கும் அவருக்கு நன்றி கூறுவதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள ட்ரம்ப் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீதான வரியை உயர்த்தியதாக கூறினார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் ரஷ்யா - உக்ரேன் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.