எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் காலமானார்.
மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுகவீனம் காரணமாக புத்தளம் அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலியாஸ் தனது 78ஆவது வயதில் காலமானார்.
இவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் போது யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மரணமடைந்த மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் வினவிய போது அதற்கு பதிலளித்த அவர்,
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி வேட்பாளர் மொஹமட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்று நபரை முன்வைக்க பிரதிநிதிகள் விண்ணப்பித்தால் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.