அதிபரின் நெருங்கிய தொடர்பில் அரசியல்வாதிகள்: தொலைபேசியில் சிக்கிய இரகசியம்

அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் கையடக்க தொலைபேசியில், பல அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவர் கடந்த 5ஆம் திகதி (05.11.2025) போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிபர் தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸில் முன்னிலையாகுமாறு  அறிவுறுத்தல்

அதிபரின் மனைவி இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரிடம் மேலதிக வாக்குமூலங்களை பெற அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த அதிபர் சிறிது காலமாக ஏராளமான அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், அவர்களின் தொலைபேசி எண்களை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.