அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத்தீ-பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மிக வேகமாக பரவிவரும் காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.டென்வரின் வடக்கே உள்ள போல்டர் கவுண்டியில் வேகமாக தீ பரவி வருவதாக ஆளுநர் ஜெரெட் போலிஸ் தெரிவித்துள்ளார்.லூயிஸ்வில்லி மற்றும் சுப்பீரியர் நகரங்களில் உள்ள சுமார் 30,000 பேர் வியாழக்கிழமை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டனர். அத்துடன் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மணிக்கு 169 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் காற்று, வரலாற்று வறட்சிக்கு மத்தியில் இப்பகுதி முழுவதும் காட்டுத்தீயை உருவாக்க வழிவகுத்துள்ளது.மார்ஷல் ஃபயர் மற்றும் மிடில் ஃபயர் ஃபயர் என்று பெயரிடப்பட்ட இந்த தீ விபத்து, விரைவில் மாநிலத்தின் நவீன வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாக மாறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்கு வட அமெரிக்காவில் காட்டுத் தீ சமீப வருடங்களில் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.