தொடர்ந்து போதை பொருள்கள் கடத்தல் படங்கள் எடுப்பது ஏன்?-லோகேஷ் கனகராஜ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் அடுத்த திரைப்படமான “ விஜய் 67 “ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்களில் போதை பொருள்கள் கடத்தல் குறித்து குறிப்பிடுவது வழக்கமாக உள்ளது. அது ஏன் என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது, தற்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் போதை பொருள்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனை முற்றிலுமாக தடுக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். என்னுடைய படத்தின் போதைப்பொருள்கள் குறித்து கூறுவதற்கு காரணமும் இது தான் என்றார்.மேலும், போதை பொருள்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இதனால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பது தான் எனது நம்பிக்கை. அதற்காக தான் எனது படங்களில் போதை பொருள்கள் குறித்தும் அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்றார்.