சிறிலங்காவின் அடுத்த அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சஜித் நிச்சயம் இந்த நாட்டின் அதிபராக வருவார். கஜகேசரி எனும் சக்தி வாய்ந்த ராஜயோகம் அவரது ஜாதகத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த முறை தேர்தல் ஒன்று வைத்திருந்தால் 8வது அதிபராக சஜித் பிரேமதாஸவே செயற்பட்டிருப்பார். எனினும் தேர்தல் வைக்காமல் இருந்தமையினால் சஜித்தினால் அதிபராக முடியவில்லை.
எனினும் நாட்டின் 9வது அதிபராக சஜித் பதிவி ஏற்பதற்கு அனைத்து பலன்களும் உள்ளது. இதனால் என்னால் உறுதியாக கூற முடியும் இந்த நாட்டின் அடுத்த அதிபராக சஜித் நியமிக்கப்படுவார்.
அவரது வெற்றியை தடுக்க முடியாது. கடந்த தேர்தலில் சஜித் தோல்வியடைந்தார். அதற்கான நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தந்தை ரணசிங்க பிரேமதாஸவை போன்று சஜித் நாட்டை ஆழ்வார் என சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.