புதிய இணைப்பு
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூவரும் 15 நாட்களுக்கு முன்பு படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வல்வெட்டித்துறை பகுதியில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த மூன்று சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் எனவும் கூறப்படுகிறது.
அதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டவை என்பதும் கண்டறிப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் (Srilanka) இருந்து சட்டவிரோதமாக தமிழ்நாடு சென்றிருந்த 3 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக படகில் குறித்த 3 பேரும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மண்ணடியில் தங்கி இருந்த இசைவேந்தன், யோகராசா, சுஜீவனை நேற்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் மூன்று பேரிடமும் இந்தியாவில் வந்து தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் மூன்று பேர் மீதும் இலங்கையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை செல்லும் விமானத்தில் மூன்று பேரும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
