அமெரிக்காவின் வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்? என ஏ.ஐ. வீடியோ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
ஓராண்டாக காசாவுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வந்த போரானது முடிவுக்கு வந்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பரஸ்பரம் கைதிகளின் விடுவிப்பு நடந்து வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சில வாரங்களுக்கு முன் காசாவை எடுத்து கொள்ள விரும்புகிறேன் என அறிவித்து, உலக நாடுகளை அதிர்ச்சியுற செய்தார் டிரம்ப்.
பாலஸ்தீன நாட்டுக்கான ஆதரவு என்ற அமெரிக்க கொள்கைக்கான நீண்டகால நிலைப்பாட்டில் இருந்து விலகும் முடிவாக அது பார்க்கப்பட்டது.
ஆனால் அதனை அடைவது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதில் சந்தேகங்களும் எழுந்தன. இதன் ஒரு பகுதியாக, காசா மக்களை பிற நாடுகளில் குடியமர்த்தும் திட்டமும் அதில் உள்ளது.
ஆனால், அது தற்காலிக திட்டம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ குறிப்பிட்டார். இதற்கு நட்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், ஹமாஸ் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், அது தற்காலிக திட்டம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ குறிப்பிட்டார். இதற்கு நட்பு நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், ஹமாஸ் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், காசாவை அமெரிக்கா தன்வசப்படுத்தி, எடுத்து கொண்டால் அதன்பின்னர் எப்படி இருக்கும் என்பது பற்றிய செயற்கை நுண்ணறிவு வீடியோ ஒன்றை டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
போரால் சீரழிந்த காசா தற்போது எப்படி உள்ளதோ, அதுபோன்ற காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. ஆனால், கடற்கரையருகே நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள், தெருக்களில் சொகுசு கார்கள், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற தனித்துவம் வாய்ந்த உருவம் கொண்ட உயர்ந்த கட்டிடம் என நகரம் உருமாற்றம் பெற்று குறித்த காணொளியில் காண்பிக்கப்பட்டு உள்ளது.
வீடியோவில் காசாவின் ஆடம்பர தோற்றங்கள் காட்டப்பட்டு உள்ளன. வான்வரை உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பரபரப்பாக செயல்படும் சந்தைகள், கடற்கரைகள் என ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.
பனைமரங்களால் சூழப்பட்ட டிரம்ப்பின் பெரிய உருவ சிலை ஒன்றும் காணப்படுகிறது.
புதிய காசாவில் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். கடற்கரையில், புன்னகைத்தபடி மஸ்க் தன்னுடைய உணவை சாப்பிடுகிறார். நடன கலைஞர்கள் விருந்தினர்களை மகிழ்விக்கின்றனர்.
கடற்கரையில் இருந்து சற்று தொலைவில், குழந்தை ஒன்று சந்தை பகுதியில், டிரம்ப் பலூன் ஒன்றை பிடித்தபடி காணப்படுகிறது. இரவு விடுதி ஒன்றில், நடன பெண்மணியுடன் டிரம்ப் இருப்பது போன்றும், மஸ்க் கடற்கரையில் பணமழை பொழியும் காட்சிகளும் உள்ளன.
நகரின் நடுவே, டிரம்ப் காசா என்ற பெயருடன் உயர்ந்து நிற்கும் கட்டிடம் ஒன்றும் உள்ளது. இறுதியாக, டிரம்ப் மற்றும் நெதன்யாகு இருவரும் நீர்நிலை ஒன்றின் அருகே கோடை வெயிலை தணிக்கும் வகையில் குறித்த காணொளி அமைந்துள்ளது.
இந்நிலையில் ட்ரம்பால் வெளியிடப்பட்டுள்ள குறித்த காணொளி பல்வேறு தரப்பிடையே பெரும் பேசும்பொருளாகியுள்ளதுடன், இது குறித்து கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.